அம்பாறை மாவட்டத்தில் நிலவி வரும் வரட்சி நிலையால் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள , சாகாமம் குளம் தற்போது வரண்ட நிலையில் காணப்படுகிறது. வரட்சியாலும் குழாய்நீர் துண்டிப்பாலும் எமது திருக்கோவில் பிரதேசத்தில் சுமார் 20ஆயிரம் பேர் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீரின்றியும் உணவின்றியும் கால்நடைகள் மேய்ச்சலுக்காக அவதியுறுகின்றன. நீரின்றி வரண்டு கிடக்கும் வயல்வெளியில் கால்நடைகள் உணவுக்காக அலைகின்றன, மக்களோ குடிக்க தண்ணீர் இன்றி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்,இது இக் கோடை காலத்தில் மட்டுமல்ல , கடந்த சில வருடங்களாகவே இச் சவாலுக்கு திருக்கோவில் பிரதேச மக்கள் முகம்கொடுக்கின்றனர், இதற்கான தீர்வுகள் இருந்தும், அரசியல் வாதிகளோ, அதி உயர் அதிகாரிகளோ நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
இதோ , திருக்கோவில் பிரதேசத்தை நேசிக்கும் மக்களால் தயாரிக்கப்பட்ட
தீர்வுத்திட்டம் :
சீர் செய்யப்பட வேண்டிய பகுதி :01
(THERE IS NO GATE VALVES)
சாகமம் குளத்திற்கான ஊட்டல் நீர்த்தேக்கமாக பன்னலகம நீர்த்தேக்கம் இருந்தும், அதிலிருந்து கிடைக்கும் நீரானது, சரியான முறையில் சாகமம் குளத்தை சென்றடையாமல் வீணாகின்றது.
(உ+ம்) கற்கடவத்தை அணைக் கட்டு பகுதியில் மரத்தாலான தடுப்புகள் மூலம் நீரை உரிய முறையில் வழிப்படுத்த முடியாமை.
சீர் செய்யப்பட வேண்டிய பகுதி :02
பன்னலகம நீர்தேக்கத்திலிருந்து விவசாய நடவடிக்கையின் பின்னரான பெருமளவு உபரி நீர் , பனிச்சையடி பகுதிக்கு வந்து சேர்கின்றது, இந் நீரானது அவ்விடத்திலிருந்து இரு பகுதிகளாகப் பிரிகின்றது.
1. தாழ் நில வாய்க்கால் (LOW LAND CHANNEL) ஊடக அதிகளவான நீர் முகத்துவாரமூடாக கடலைச் சென்றடைகின்றது (சிறிய அளவில் விவசாய நடவடிகைகளுக்கும் பயன் படுகின்றது)
2. உயர் நில வாய்கால் (HIGH LAND CHANNEL) ஊடாக சிறிதளவு நீர் சாகமம் குளத்தை வந்தடைகின்றது. இவ் உயர் நில வாய்க்காலிற்கான வாயில் அடைப்பானோ அல்லது துரிசை சிறப்பாக கையாள்வதற்கான பொறிமுறை இல்லாததால் பெருமளவு நீர் வீணாகின்றது.
சீர் செய்ய வேண்டிய பகுதி 3:
சாகாமம் குளத்தின் நீர்பிடிப்பு பகுதியானது பரந்து விரிந்து காணப்பட்டாலும், படத்தில் காட்டப்பட்ட பகுதியானது ஆளப்படுத்தப்பட்டால்தான் , சாகம் குளத்தின் கொள்திறன் அதிகரிக்கப்பட்டு நீர்பிடிப்பு அதிகரிக்கும், ஆனால் பேராசை பிடித்த மணல் ஏற்றும் கொள்ளைக் கும்பலும், அதிகாரிகளும் சேர்ந்து தேவையற்ற இடத்தில் மணல் அள்ளுவதால் எந்த பிரயோசனமும் இல்லை.
இவற்றை சீர் செய்தால் , திருக்கோவில் பிரதேசத்தின் குடிநீர் தேவையை 100 % பூர்த்தி செய்யலாம்.
"நீரின்றி அமையாது உலகு.."
By : பிரசாந்தன் (ஆசிரியர்)
No comments:
Post a Comment