Sunday, June 16, 2019

கல்லோயா அபிவிருத்தி திட்டத்தின் - வலது கரை வாய்க்கால் (சாகாமம் வரை ) செயல்திட்டம் மீண்டும் முன்னெடுக்கப்படுமா ?

 1950-1955 ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்டு உரியகாலத்திற்கு முன்னரே முடிக்கப்பட்ட சமூக-பொருளாதார பல் நோக்கு அபிவிருத்தித் திட்டமாகும் (திட்ட வரைபு பின்னிணைக்கப்பட்டுள்ளது)
1.    விவசாயம் - நெற்செய்கை , கரும்பு செய்கை
2.    மின்சார உற்பத்தி
3.    ஓட்டு தொழிற்சாலை
4.    சீனி தொழிற்சாலையூடன் இணைந்த வடிசாலை
5.    தச்சுத்  தொழிற்சாலை
6.    சவளக்கடை அரிசி ஆலை (கிழக்காசியாவிலேயே பெரியது)
7.    டயர் புதுப்பிக்கும் நிலையம்

ஆகியவற்றை உள்ளடக்கி அம்பாரை மாவட்ட ஏழை மக்களின்  வாழ்வை வழமாக்க வழிசமைத்த இத்திட்டத்திற்க்கான எண்ணக்கருவானது  திரு ஜே.எஸ்.கெனடி அப்போதைய (நீர் பாசன பிரதி பணிப்பாளர்- மட்டக்களப்பு ) அவர்களால் 1930 ம் ஆண்டளவில் தொடங்குவது சம்பந்தமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


இதன் பிரதான நீர் வரத்தான பட்டிப்பளை ஆற்றின் வாயைத்தேடி இப்பகுதி வனாந்ததரங்களில் பல நாட்கள் அலைந்து திரிந்து ஈற்றில் இங்கினியாகல என்னும் குன்றின் உச்சியில் ஏறி நின்று , அதன் மேற்கே தெரிந்த பகுதிதான் என்பதை தன் மனம் உறிதி செய்தபோது ” நான் சில தினங்களாக வனாந்தரத்தினுள் நடமாடி இவ்விடத்தில் வந்து சேர்ந்தேன்.  இங்கினியாகல குளக்கட்டடை கட்டுவதற்கான இடம் தான்; என் கண்முன்னே தெரிகின்றது. சில வேளை அவ்வாறான சம்பவம் நடந்து விட்டால் எதிர் காலத்தில் வரக்கூடிய எந்த ஒரு அரசாங்கத்திடமும் நான் வேண்டுவது என்னவெனில் இந்த நீர்பாசன திட்டத்தினால் உண்டாகும் பிரச்சனைகளை
மணிதாபிமானத்தின் கோணத்தில் வெளிச்சப் படுத்துமாறுதான்

அப்போது விவசாய அமைச்சராக இருந்த கௌரவ டி.எஸ்.சேனநாயக்க அவருடன் கலந்தாலோசித்து இத்திட்டத்தை முன்னெடுப்பது சம்பந்தமாக கருத்தாடப்டடபோது இத்திட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கப்படவேண்டும் என்னும் எண்ணக்கரு உதயமானது.  இத் திட்டமானது இந்தியாவின் தாமோதர் பள்ளத்தாக்கு கழகம் போன்று இது வெற்றிகரமாக செயற்பட வேண்டும் என எதிர்பார்த்தனர்.

ஊவா மாகாணத்தின் மடுல் சீமை மலைத்தொடரில் ஊற்றெடுக்கும் நீர்; தோற்றுவாய் விபிலை பசறை பிரதேசங்ககளில் பெறப்படும் மழை நீர் என்பவற்றை பல நூறு மைல் கிழ‌க்கு கடலில் (ஒலிவில் அட்டப்பளம் பகுதி) சங்கமமாதையும் இங்கினியாகல என்னும் இடத்தில் பட்டிப்பளை ஆற்று வாயூடாக ஊடறுத்து வருவதையே ஜ.எஸ்.கெனடி  உறுதிப்படுத்திக் கொண்டார்.



இது டீ.எஸ்.சேனநாயக்கா அவர்களால்   ஏற்றுக் கொள்ளபட்டவுடன் இதனை ஆய்வூ செய்து அறிக்கை சமர்பிக்குமாறு அப்போது மட்டக்களப்பு நீர்பாசன பொறியியளாரான திரு.ரி.அரசரெத்தினம் மற்றும் நில அளவை பணிப்பாளர் நாயகம் ;கலாநிதி எஸ்.புரோகியர் ஆகியோரை வேண்டியதை தொடர்ந்து அவர்கள்; 1940 ஆண்டு  சம்மாந்துறை பிரதேசத்திற்கு வந்தனார்.  அப்போது இங்கு நீர்பாசன வேலைகளை கவனித்த எம்.எம்.இப்றாகிம் சுப்பிறீந்தர் அவார்கள் அம்பாறை இ இங்கினியாகலை ஆகிய இடங்களுக்கு இவர்களை மாட்டு வண்டி மூலம் அழைத்து சென்று இரு வாரங்கள் வரை தங்கியிருந்து ஆய்வூ செய்து விரிவான அறிக்கையை சமர்பித்தனர்;. இவ்வறிக்கையை அப்போதைய அணைக்கட்டு நிபுணரான டாக்டர் சாலேஜ் என்பவாரிடம் வழங்கி அவரின்  அனுமதியுடன் 1946 ம் ஆண்டில் 51 ம்  இலக்கம் கொண்ட 17-1 சட்டத்தின் கீழ் கல்லோயா அபிவிருத்தி சபை உருவாக்கப்பட்டது.

இச் சபையின் தலைவராக அப்போதைய  சிவில் சேவையில் முதல்தரத்தை உடைய‌ திரு.சே.கனகரெத்தினம் நியமனம் செய்யப்பட்டார் உறுப்பினர்களாக நீர்பாசன பணிப்பளராக இருந்த திரு.ரி. அரசரெத்தினம்;. நில அளவை நாயகமாக இருந்த கலாநிதி எஸ்.புரொகியர். எஸ்.எம்.விஜயபாகு  விஜயசிங்க நியமனம் செய்யப்பட்டிருந்தார்கள். பொது முகாமையாளராக சிவில் சேவையில் இருந்த ஐ.எம்.த.சில்வாவும் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

ஆணைக்கட்டின் வேலைகளை இலங்கை அரசு , அமேரிக்க‌ அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தபடி மொறிசன் நட்சன் இன்டநசனல் கார்பரேசன் ஸ்தாபனம் 1948ம் ஆண்டில் அணைக்கட்டு , மின்சார நிலையம் போன்றவைகளின் வேலைளை ஆரம்பித்து 1951ம் ஆண்டளவில் கட்டி முடிக்கப்பட்டது. பிரதான அணை ஆற்றுப்படுக்கையில் இருந்து 120 அடி உயரமுடையது. அதன் நீளம் 8000 அடியும் உச்சியின் அகலம் 30 அடியுமாகும். இதன் நீர் கொள்ளவூ 770000 ஏக்கர்,  அடியும் இதன் பரப்பு 35.8 சதுர மைல்களாகும். நீரேந்து பரப்பு 384; சதுர மைல்களாகும். வெள்ளக் கட்டுப்பாட்டு தேவைகளைப் பொறுத்து மேலும் 10 அடி  கூடிய உயரமும் 1000000  ஏக்கர் கொள்ளவும் உள்ள நீர்தேக்கமாகும். இதுவே இலங்கையின் மிகப்பெரிய நீர் தேக்கமுமாகும்.

கல்லோயா வேலைத் திட்டங்கள் திட்டமிடப்பட்டு கட்டம் கட்டமாக செய்யப்பட்டு வந்தன. இதன்படி பின்வரும் அபிவிருத்திப் பிரதேசங்களை இனம் கண்டு பின்வருமாறு செயற்படுத்தப் பட்டன. இதன்படி

 (A) 1950-51 அபிவிருத்தி பகுதி 
 (B) 1951-52  அபிவிருத்தி பகுதி
 (C) 1952-53  அபிவிருத்தி பகுதி
 (D) 1954-54 அபிவிருத்தி பகுதி 

இவ்வாறு செயற்படுத்தப்பட்டு வந்தபோதும் 1956 ம் ஆண்டின் பின்னர் செயல்படுத்தப்துவதற்கு  முன் மொழியப் பட்டிருந்ததும்  பொத்துவில் தொகுதி எல்லைக்குள் முற்றாக வருவதுமான வலது கரை வாய்க்கால் வேலை இற்றைவரை பூர்த்தி செய்யப்படாமல் கைவிடப்பட்டதை நினைத்து  இப் பகுதி வாழ் தழிழ்பேசும் மக்கள் கவலைப்படாமல் இருக்கமுடியாது.


வலது கரை வாய்க்கால்

இது 22 மைல்கள் நீளமாதுடன் , சாகாமம் குளத்தை வந்து அடையும் படியாக பட்டிபளை ஆற்றுடன் இணைந்ததாக முனனோடித் திட்டத்தில் முன்மொழியப்ட்டுள்ளது.

1956ம் ஆண்டின் பின்னர் செயல்படுத்த வேண்டியதாக திட்டமிடப்பட்ட இவ் வலது கரை வாய்க்கால் இதுவரை செயல்படுத்தாமலும் அடையாளப்படுத்த முடியாமல் இருப்பதற்கான காரணங்களாக பின் வருவரும் விடையங்கள் எம்மால் கண்டறியப்பட்டுள்ளன.

  • 1956ம் ஆண்டு வரை கல்லோயா அபிவிருத்தி சபையாக மிக திறமையாக செயல்பட்ட இச்சபை ஆற்று ப்ள்ளதாக்கு அபிவிருத்தி சபையாக மாற்றப்பட்டதுடன். இதன் இயந்திரங்கள் மற்றும் வளங்கள் உடவளவை திட்டத்திற்கு எடுத்து செல்லபட்டமை.
  • இத்திட்டத்தின் பிதாவும் ,  இந்நாட்டின் முதலாவது பிரதம மந்திரி தேசபிதா அவர்கள் டி.எஸ்.சேனநாயக்கா உயிருடன் இல்லாமல் போனமை.
  • தமிழ் பிரதேசத்திற்கு இதனை முன்னெடுக்ககூடிய தன்னலமற்ற துணிந்த அரச அதிகாரிகள் இல்லாமல் போனமை.
  • ஆற்று பள்ளதாக்கு அபிவிருத்தி சபை உறுப்பினர்களின் மாற்றம். பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களின் பாரபட்சம்.
  • இஸ்மயில் எந்திரி அவர்கள் 1956ம் ஆண்டுக்கு பின்னர் வாய்க்கால் நிர்மாணத்தில் தனது கவனத்தை குறைத்து (நவகிரி , பள்ளங் ஓயா , பன்னலகம ஓயா , கரன்டி ஓயா) ஆகிய நீர்பாசன திட்டங்களை நிர்மாணிப்பதில் கூடிய அக்கறை காட்டியமை
  • ஆற்றுபள்ளத்தாக்கு அபிவிருத்தி சபை இதற்கான நிதி வழங்களை முடக்கியமை.
  • 1956ம் ஆண்டிற்கு பின்னர் வாய்க்கால் உட்கட்டமைப்பில் மேற்கொள்ளபட்ட செயற்பாடுகள். ஆற்றுபள்ளத்தாக்கு அபிவிருத்தி சபை இதற்கான நிதி வழங்களை முடக்கியமையை அடுத்து  அப்போது பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர் எம்.எம்.முஸ்தபா (பா.உ அவர்கள்) , அப்போதைய காணி , மற்றும் காணி அவிருத்தி அமைச்சராக இருந்த கௌரவ சி.பி.டி சில்வா அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அன்னாரின் நிதி ஒதுகீடு ரூபா முப்பத்தி மூன்று இலட்சம் கரை ஓர விவசாய செய்கைக்காக பெற்று வலது கரை வாய்க்கால் வேலைகளை குறிப்பிட்ட கண்டங்களின் இருந்து தலா 200 ஆட்களைப் பெற்று செய்ததுடன் அதனுடன் இணைந்த வலதுகரை க்கான மின்சார விநியோகத்தையும் பெற்றுக்கொடுத்தார். இக்கால கட்டத்தில் வலது, இடது கரை வாய்க்கால் வேலை செயற்பாடுகள் 35 வீதம் குறைக்கப்பட்டது. இதனை கௌரவ ஜே.ஆர் .ஜெயவர்த்தனா அவர்களின் கவனத்திற்கு அமரர் எம்.ஏ.மஜீத் (பா.உ பொத்துவில் ) அவர்களால் கொண்டு சென்று அமெரிக்க ஐக்கிய இராச்சியதின் நிதி வளத்தைபெற்று அன்னமலை , மண்டூர் பகுதியின் விவசாய செய்கையை உறுதிபடுத்தினார்.
  •  1970 ஆண்டு அம்பாரை மாவட்டத்தின் அரசாங்க அதிபராக கடமையேற்ற திரு.பிரட்மன் வீரக்கோன் இத்திட்டத்தின் வாய்க்கால் உட் கட்டமைப்பு சேதமடைந்திருந்ததையும் இலங்கையின் முதல் பிரதம மந்திரியின் சிந்ததனையுமான இந்த கல்லோயா அபிவிருத்தித் திட்டத்தின் உட்கட்டமைப்பு வேலைகள் கடந்த இருபது வருடங்களாக சிதைவடைந்திருப்பதை அவதானித்து இதனை புணரமைப்பதற்கும் கல்லோயா அபிவிருத்தி சபையின் அதிகாரங்களையும் உடமைகளையும் அரசாங்க அதிபரின் கீழ் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தார். அம்பாறை மாவட்டத்தின் தென் பகுதியின் பெரும் பகுதியின் அபிவிருத்தி பற்றியும் அக்கறை காட்டினார்
அம்பாறை மாவட்டத்தின் தென் பகுதி அபிவிருத்தியும் வலது கரை வாய்க்கால் செயற்திட்டமும்

கல்லோயா அபிவிருத்தி திட்டத்தில் வலது கரை வாய்க்கால் 1956ம் ஆண்டுக்கு பின்னர் செயற்படாமல் போனதற்கான காரணங்களை ஏற்கனவே சுட்டிகாட்டியுள்ளோம்.  இது பூரணப்படுத்தப்பட்டடிருந்தால் சாகாமக்குளத்திற்கு வேண்டிய போது சேனநாயக்க சமுத்திரன் நீர் விநியோகத்தை பெற்று ஆலையடி பிரதேச செயலக பிரிவு , திருக்கோயில் பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள சுமார் இருபதினாயிரத்திற்கும் ஏக்கருக்கு மேற்ப்டட காணிகள் இருபோக செய்கையுடன் மேட்டு நில பயிர் செய்கை குடிநீர் நன்னீர் மீன் வளர்ப்பு கால்நடை விவசாயம் மூலம் இப்பிரதேச மக்களின் வாழ்வியல் மாற்றம் கண்டிருக்கும். மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும்.

ஆம்பாரை மாவட்டத்தின் தென் பகுதி பிரதேசத்தில் உள்ளதும்  ஆரையடிவேம்பு பிரதேசம் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள பெரிய பாசன நீர்த்தேக்கங்களான

1)    வம்மியடிக் குளம்
2)    சாகமக் குளம்
3)    பெரியதலாவைக்  குளம்
4)    ரூபஸ் குளம்
5)    கஞ்சி குடி ஆற்றுக் குளம் ஆகியவற்றுடன் இப்பகுதில் இனங்காண‌ப்பட்டுள்ள சுமார் 50 மேற்பட்ட சிறிய குளங்களையும்  இணைத்து வலதுகரை வாய்க்கால் திட்டத்தை வரும் காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.


                                                                                   -- N.Prashanthan  , N.S.Sundharamoorthy(JP)  -  

No comments:

Post a Comment